/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி அருகே குப்பையை கொட்டும் ஊழியர்கள்; துர்நாற்றத்தில் தவிக்கும் தேவகோட்டை மாணவர்கள்

ADDED : அக் 19, 2024 05:41 AM

தேவகோட்டை : இரண்டு பள்ளிகளுக்கு இடையே நகராட்சியினர் குப்பை கழிவுகளை கொட்டுவதால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
தேவகோட்டையில் சிவன்கோவில் கிழக்கில் மேலக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கரையோரம் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி, ராமகிருஷ்ணா நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் கண்மாய் கரையோரம் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது.இரு புறமும் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் சிவன் கோவிலுக்கு செல்லும் மக்கள் இந்த ரோட்டின் வழியே சென்று வருகின்றனர்.
அருகில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். நகராட்சியினர் குப்பை, மாமிச கழிவுகளை அருகில் கொட்டி வருகின்றனர்.
கொஞ்சமாக கொட்ட ஆரம்பித்து இப்போது மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது.
குப்பைகளும் பள்ளி, குடியிருப்பு பகுதிக்கு பறந்து செல்கிறது. இந்த குப்பை, கழிவுநீரில் நடந்து தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதோடு, இந்த துர்நாற்றத்தில் அமர்ந்து காலை முதல் மாலை வரை பாடங்களை படிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். நோய் தொற்று பரவும் அபாயமும் பள்ளி குழந்தைகள், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினரின் எதிர்ப்பையும் மீறி நகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அலட்சியமாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
சோமசுந்தரம் கூறுகையில், கொட்டுபவர்களிடம் நேரிடையாக கூறியும் தொடர்ந்து கொட்டுகின்றனர். கலெக்டர் பார்வையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.