/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உறவினர் மிரட்டுவதாக புகார் குடும்பமே தற்கொலை முயற்சி
/
உறவினர் மிரட்டுவதாக புகார் குடும்பமே தற்கொலை முயற்சி
உறவினர் மிரட்டுவதாக புகார் குடும்பமே தற்கொலை முயற்சி
உறவினர் மிரட்டுவதாக புகார் குடும்பமே தற்கொலை முயற்சி
ADDED : டிச 01, 2024 07:29 AM

காரைக்குடி : சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாச்சி குடியிருப்பத்தை சேர்ந்தவர் உடையப்பன். இவரது மனைவி லதா 40. அதே ஊரைச் சேர்ந்த, உடையப்பனின் உறவினர் ஒருவர் தங்களது குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், அவதூறாக பேசி மிரட்டுவதாகவும் உடையப்பன் சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நேற்று உடையப்பன் மனைவி லதா, மற்றும் அவரது மகள் உள்ளிட்டோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.