/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எலும்பு முறிவு பிரிவில் ஒரு டாக்டர் மட்டுமே அரசு மருத்துவனையில் காத்திருந்த அவலம்

ADDED : ஜூன் 25, 2025 08:41 AM

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான எலும்பு முறிவு பிரிவில் ஒரு டாக்டர் மட்டுமே சிகிச்சை அளித்ததால் நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் அறை எண் 9, 10ல் ஆர்தோ பிரிவு செயல்படுகிறது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
இப் பிரிவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துறை தலைவர் தலைமையில் 9 டாக்டர் பணிபுரிகின்றனர். இதில் ஆர்தோ வார்டில் 2 பேரும், ஆப்பரேஷன் தியேட்டரில் 2 பேர், தாய் வார்டில் ஒருவர் போக மீதமுள்ள வர்கள் புறநோயாளிகள் பிரிவில் பணிபுரிய வேண்டும். ஆனால் நேற்று 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்த நிலையில் காலை 10:30 மணிக்கு ஒருவர் மட்டுமே பணியில் இருந்து சிகிச்சை அளித்துள்ளார். அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு வந்த சிலர் சிகிச்சை பெறாமல் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர். புறநோயாளிகள் பிரிவிற்கு தேவையான டாக்டர்கள் பணியில் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.