/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் புதிய பைபாஸ் சாலை ஆய்வை துவக்கியது நெடுஞ்சாலைத்துறை
/
சிங்கம்புணரியில் புதிய பைபாஸ் சாலை ஆய்வை துவக்கியது நெடுஞ்சாலைத்துறை
சிங்கம்புணரியில் புதிய பைபாஸ் சாலை ஆய்வை துவக்கியது நெடுஞ்சாலைத்துறை
சிங்கம்புணரியில் புதிய பைபாஸ் சாலை ஆய்வை துவக்கியது நெடுஞ்சாலைத்துறை
ADDED : பிப் 13, 2024 06:54 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பைபாஸ் சாலை அமைக்க பூர்வாங்க பணி துவங்கியது.
சிங்கம்புணரி, திருப்புத்துார் வழியாக செல்லும் காரைக்குடி- திண்டுக்கல் சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. இச்சாலையில் வாகனப் போக்குவரத்து பெருகியது.
சிங்கம்புணரி,திருப்புத்துார் பகுதிகளில் இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
தற்போது இந்த இரண்டு நகருக்கும் வெளியே வடக்கு பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. காரைக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் திருப்புத்தூர், சிங்கம்புணரி நகருக்குள் செல்லாமல் வடக்கே சில கி.மீ., தொலைவில் செல்லும் வகையில் பைபாஸ் சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக ஜி.பி.எஸ் மூலம் அளவீடு மற்றும் ஆய்வு பணிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது.
விரைவில் வழித்தடம் முடிவு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.