தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மனிதசங்கிலி போராட்டம்

மனிதசங்கிலி போராட்டம்

மனிதசங்கிலி போராட்டம்


UPDATED : நவ 18, 2026 04:57 PM

ADDED : நவ 18, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:57 PM ADDED : நவ 18, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 27 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரவியம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடசுப்பாராம், நீலமேகம், சங்கரசுப்பிரமணியன், எஸ்.பாலுச்சாமி, அந்தோணிராஜ், கண்ணுச்சாமி முன்னிலை வகித்தனர். 70 மற்றும் 80 வயது ஓய்வூதியருக்கு தலா 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய விரும்புவோரை மட்டுமே சேர்க்க வேண்டும் உட்பட 27 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி வடிவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தபால்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார். ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us