/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் தொடர்கிறது! மவுனம் காக்கும் அதிகாரிகள், போலீசார்

ADDED : நவ 12, 2025 11:52 PM

திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விழாக்கள், உறவினர் வீட்டு விசேஷங்கள் உள்ளிட்டவற்றிற்கு செல்ல அதிகமாக நாடுவது சரக்கு வாகனங்களைத்தான். செலவும் குறைவு, கூடுதல் ஆட்களை ஏற்றிச் செல்லலாம் என்பதால் பெரும்பாலும் சரக்கு வாகனங்களையே தேர்வு செய்வார்கள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது தவறு என்றாலும் கிராமமக்கள் அதனை கண்டு கொள்வது கிடையாது.
ஒரு சுற்றுலா வேனில் 14 பேர் பயணம் செய்ய முடியும், சரக்கு வாகனத்தில் 30 பேர் வரை பயணம் செய்ய முடியும், வெயில், மழை காலங்கள் என்றால் சரக்கு வாகனத்தின் மேற்பகுதியில் பிளக்ஸ் போர்டுகள், தார்ப்பாய் கட்டி செல்வது வழக்கம், நேற்று திருப்புவனத்தில் சரக்கு வாகனத்தின் மேற்பகுதியில் தகரத்தால் தற்காலிக கூரை தயாரித்து அதனை இரும்பு போல்ட்கள் மூலம் மேற்பகுதி கம்பியில் இணைத்து பயணிகள் வேன் போல மாற்றி யிருந்தனர்.
இந்த வாகனத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். நகரின் மையப்பகுதியில் இந்த வாகனம் உலா வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் யாரும் கண்டு கொள்ளாததால் இந்த நிலை தொடர்கிறது.