/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புளியாலில் ரோட்டின் ஓரம் குளம்போல் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக்கேட்டில் தவிப்பு

ADDED : பிப் 19, 2024 05:21 AM

தேவகோட்டை, : தேவகோட்டை அருகே புளியாலில் ரோட்டின் ஓரம் சாக்கடை கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், துர்நாற்றம், நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் அமைந்துள்ளது. ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பள்ளி, நர்சிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இங்கு வீடுகள், தொழில் நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுநீரை ஊருக்கு வெளியே கடத்தி செல்ல கால்வாய் வசதி செய்யவில்லை. இதனால், தெருக்களில் ஓடும் கழிவுநீர் ராமேஸ்வரம் ரோட்டில் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. இந்த கழிவுநீர் அருகில் உள்ள கண்மாயிலும் கலப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.
சாக்கடை கால்வாய்களில் செப்டிக்டேங்க் கழிவுகளையும் விடுவதால், புளியால் மக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. பல கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து புளியாலை சேர்ந்த ராஜ் கூறியதாவது, கடந்த 7 ஆண்டிற்கு முன் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கால்வாயை துார்வாருவதாக கூறினர். இந்த கால்வாயை முறையாக துார்வாரமல் விட்டதால், பள்ளங்கள் ஏற்பட்டு அங்கு கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றன, என்றார்.