/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொலை செய்தவர் தப்ப முயன்ற போது கால் முறிவு
/
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொலை செய்தவர் தப்ப முயன்ற போது கால் முறிவு
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொலை செய்தவர் தப்ப முயன்ற போது கால் முறிவு
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொலை செய்தவர் தப்ப முயன்ற போது கால் முறிவு
ADDED : அக் 27, 2024 01:54 AM

சிவகங்கை:சிவகங்கை அருகே 13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிந்தது.
சிவகங்கை அருகே கல்குளத்தில் கரும்பு தோட்டத்தில் உள்ள கிணற்றில் அக்.,24ல் 13 வயது சிறுமி சடலமாக கிடந்தார். தோட்ட உரிமையாளர் சிவகங்கை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் ராமச்சந்திரன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படையை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் அமைத்தார். சம்பவம் நடந்த கிராமத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒருவருடன் சிறுமி டூவீலரில் செல்லும் சி.சி.டி.வி., காட்சி இளையான்குடி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் சிக்கியது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சிறுமியை அழைத்துச் சென்றவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வாலாங் கோட்டையை சேர்ந்த சதீஷ் 32. என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தடயங்களை சேகரிக்க சிவகங்கை மாவட்டம் கல்குளம் அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றனர். போலீசாரை தள்ளிவிட்டு சதீஷ் தப்ப முயன்றார்.
போலீசார் விரட்டியதில் கீழே விழுந்த சதீஷுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் கூறுகையில், சதீஷ் மீது சித்தியை கொலை செய்த வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளன. இது தவிர சதீஷ் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததில் போக்சோவில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சதீஷுக்கு திருமணமாகி மனைவியை பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது அதே மருத்துவமனையில் மதுரையை சேர்ந்த இறந்த சிறுமியின் தாயாரும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுமியின் குடும்பத்திற்கு உதவி செய்வது போல் சிறுமியிடம் சதீஷ் நெருங்கி பழகினார். ஆசை வார்த்தை கூறி அக்., 24ல் சிறுமியை டூவீலரில் மதுரையில் இருந்து அழைத்துக் கொண்டு பூர்வீக கிராமமான சிவகங்கை மாவட்டம் கல்குளத்திற்கு வந்தார். அங்கு சிறுமியை பாலியல் துன்புறுதல் செய்தார். இந்த விஷயத்தை சிறுமி வெளியே சொன்னால் மீண்டும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிடும் என்ற பயத்தில் சிறுமியை கிணற்றில் தள்ளி அவர் மீது கல்லை துாக்கிபோட்டு கொலை செய்தார் என தெரிவித்தனர்.