/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு
/
கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு
ADDED : மே 07, 2025 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிபட்டியில் மஞ்சு விரட்டு நடந்தது.
இங்குள்ள செல்வவிநாயகர் மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஊர் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு கிராம பெரியவர்கள் மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர்.
முதலில் சேவுகமூர்த்தி ஐயனார் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்க்கப்பட்டன. ஏராளமான வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர். ஒரு சில மாடுகள் மட்டும் பிடிபட்டன, பல மாடுகள் வெளியேறின. மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.