/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞரை கடத்த முயற்சி விரட்டி பிடித்த போலீசார்
/
இளைஞரை கடத்த முயற்சி விரட்டி பிடித்த போலீசார்
ADDED : அக் 25, 2024 05:17 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே சூரக்குளத்தில் இளைஞரை கடத்த முயன்ற கும்பலை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் 27. இவரது நண்பர் தினேஷ் உடன் சூரக்குளம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த அரசனேரி கீழமேடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த் 30, வாணியங்குடி முத்துராமன் மகன் நிரஞ்சன் 18, ஆவரங்காடு நாச்சியப்பன் மகன் ராஜா 23, காஞ்சிரங்கால் அர்ச்சுனன் மகன் அழகேசன் 37 ஆகியோர் தினேஷிடம் தகராறு செய்துள்ளனர்.
இதில் தினேஷ் அரவிந்த்தை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். மோகன்தாசை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் கடத்தினர். தினேசுக்கு போன் செய்து அவர் வந்தால் தான் உன்னை விடுவோம் இல்லையென்றால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.
இந்த தகவல் சிவகங்கை நகர் போலீசாருக்கு சென்றது. இன்ஸ்பெக்டர் அன்னராஜா, எஸ்.ஐ.க்கள் ஹரிகிருஷ்ணன், வைரமணி தலைமையிலான போலீசார் அவர்கள் சென்ற காரை விரட்டி சென்று மஜித்ரோடு அருகே அரவிந்த், நிரஞ்சன், ராஜா, அழகேசன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்து மோகன்தாசை மீட்டனர்.