ADDED : ஜன 30, 2024 11:43 PM
தேவகோட்டை : தேவகோட்டை ஒன்றியம் இளங்குடியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கிராமத்திற்கான நெல் களம் கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த நெல்களம் பள்ளிக்கு இடையூறாக அமையும் சூழல் உள்ளதாக கல்வித்துறை அலுவலர்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நெல் களம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
கிராமத்தினர் கல்வி அலுவலரிடம் முறையிட்டதை தொடர்ந்து இடையூறு இல்லை கல்வி அலுவலர்கள் மாற்றி தெரிவித்துள்ளனர். கல்வி அலுவலர்களின் முதலில் தெரிவித்த கடிதத்தை வைத்து சிலர் நெல் களம் கட்டுவதற்கு தடை உத்தரவு பெற்று விட்டனர். இதனைத் தொடர்ந்து கிராமத்தினர் நெற்களம் கட்டும் பணியை மீண்டும் துவக்க வேண்டும். கல்வி அலுவலர்களின் முதலில் கொடுத்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராமத்தினர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திலும் , ஒன்றிய அலுவலகத்திலும் முறையிட்டனர்.