ADDED : நவ 13, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; கண்ணமங்கலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நவ. 12ம் தேதி இரவு மலைப்பாம்பு ஒன்று கோழிகளை விழுங்கி கொண்டு திரிவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வந்தது. நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று பாம்பை தேடினர். புதருக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரிந்தது.
அதைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினர் மூலம் பிரான்மலை காட்டில் விட்டனர்.

