/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியிருப்பை சூழ்ந்த கண்மாய் தண்ணீர்
/
குடியிருப்பை சூழ்ந்த கண்மாய் தண்ணீர்
ADDED : டிச 25, 2024 08:20 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் ஊருணிக்கு திறக்கப்பட்ட கண்மாய் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் செல்லும் பாலாற்றில் இருந்து அ.காளாப்பூர் பீச்சங்கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. இக்கண்மாய் நிரம்பியதை தொடர்ந்து இதன் உபரி தண்ணீரை செட்டியூரணி குளத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இதற்கான வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு மாயமான நிலையில், தண்ணீரை குடியிருப்பு அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் கழிவுநீர் கால்வாய் நிரம்பி அப்பகுதி வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இப்படி தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று ஏற்படுகிறது. கண்மாய் நீரை கழிவு நீர் கால்வாய் வழியாக கொண்டு செல்லாமல் அதற்குரிய வரத்துக் கால்வாய்களை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.