/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் திருக்கல்யாணம் இன்று சித்திரை விழா தேரோட்டம்
/
மானாமதுரையில் திருக்கல்யாணம் இன்று சித்திரை விழா தேரோட்டம்
மானாமதுரையில் திருக்கல்யாணம் இன்று சித்திரை விழா தேரோட்டம்
மானாமதுரையில் திருக்கல்யாணம் இன்று சித்திரை விழா தேரோட்டம்
ADDED : மே 09, 2025 01:41 AM

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமிகளுக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
இக் கோயிலில் சித்திரை திருவிழா 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். திருக்கல்யாணத்திற்காக நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் அலங்காரங்களுடன் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு காலை 9:00 மணிக்கு எழுந்தருளினர்.அங்கு சுவாமி சார்பில் சிவாச்சாரியார் அம்பி, அம்மன் சார்பில் சிவாச்சாரியார் ராஜேஷ் மாலைகளை மாற்றிக் கொண்டனர் .
காலை 9:50 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது.