/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை குற்றப்பிரிவில் போலீசார் இல்லை: தொடர் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல்... தவிப்பு
/
மானாமதுரை குற்றப்பிரிவில் போலீசார் இல்லை: தொடர் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல்... தவிப்பு
மானாமதுரை குற்றப்பிரிவில் போலீசார் இல்லை: தொடர் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல்... தவிப்பு
மானாமதுரை குற்றப்பிரிவில் போலீசார் இல்லை: தொடர் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல்... தவிப்பு
ADDED : செப் 09, 2025 04:04 AM

மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் 3 வருடங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என இரண்டு பிரிவுகள் தனித் தனியாக இருந்த நிலையில் 2 இன்ஸ்பெக்டர்கள், குற்றப்பிரிவில் ஒரு எஸ்.ஐ., மற்றும் 5க்கும் மேற்பட்ட போலீசார், சட்டம் ஒழுங்கு பிரிவில் 2க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றினர். இவர்களில் பலர் அன்றாட கோர்ட் பணி, சம்மன் வழங்குதல், பந்தோபஸ்து, அயல் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
3 வருடங்களாக இங்கு குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் இல்லாத காரணத்தினால் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம் பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங் களுக்குள் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலும், வைகை ஆற்றில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங் களிலும், போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திலும், மேலப்பசலை அருகே கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மண் அள்ளும் இயந்திரத்திலும் பேட்டரிகளையும்,டீசலையும் சிலர் திருடி சென்றனர்.
மானாமதுரையில் வாரந்தோறும் நடை பெறும் வாரச்சந்தையில் பணம் மற்றும் அலைபேசி களும், பல்வேறு இடங்களில் சிறிய திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கால்பிரவு அருகே உள்ள ஒரு ஓட்டலை உடைத்து அதிலிருந்து பொருட்களை யும் பணத்தையும் எடுத்து சென்றனர். திருட்டு சம் பவங்கள் குறித்து உரிமையாளர்கள் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் இதுவரை சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை.
போலீசார் கூறியதாவது:
மானாமதுரை குற்றப்பிரிவில் 3 வருடங்களாக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் பணி யிடம் காலியாக உள்ளது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரிவில் போதிய போலீசார் இல்லாத நிலையில் மானாமதுரை சப் டிவிஷன் தனிப்படை போலீசார் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வந்தனர்.
மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் விசா ரணைக்கு பின் தனிப்படை பிரிவில் இருந்த 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இருந்த தனிப்படை கலைத்து உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது போலீஸ் ஸ்டேஷனில் குற்றபிரிவில் உள்ள வழக்குகளை கையாள போலீசார் இல்லாததால் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரையில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ரீசார்ஜ் செய்யாததாலும், ஆங்காங்கே சில கேமராக்கள் பழுதடைந்து உள்ளதாலும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் அவர்களைப் பிடிப்பதிலும்,குற்றங்களை தடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
குற்றங்களை தடுக்க குற்றப்பிரிவிற்கு தேவையான இன்ஸ்பெக்டர், போலீசாரை நியமிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.