/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை
/
இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை
ADDED : ஜூலை 18, 2025 11:55 PM
இளையான்குடி: இளையான்குடி முள்ளியாரேந்தல் அருகே உள்ள உடையார் குடியிருப்பு கிராமத்தில் 3 மாதமாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 250 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாக ஆங்காங்கே குழாய் அடிக்கடி உடைவதாலும், நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுது காரணமாக குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளியரேந்தல் அருகே உள்ள உடையார் குடியிருப்பில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 மாதமாக இப்பகுதியில் காவிரி குடிநீர் வராததால் கிராம மக்கள் வண்டிகளில் வரும் நீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.