/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்னீர் வயல் கண்மாய் துாரெடுக்காததால் விவசாயம் இல்லை
/
தென்னீர் வயல் கண்மாய் துாரெடுக்காததால் விவசாயம் இல்லை
தென்னீர் வயல் கண்மாய் துாரெடுக்காததால் விவசாயம் இல்லை
தென்னீர் வயல் கண்மாய் துாரெடுக்காததால் விவசாயம் இல்லை
ADDED : செப் 20, 2024 06:54 AM
தேவகோட்டை: கண்மாய் துார்வாராப்படாததால் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்விவசாய பணிகளை விவசாயிகள் துவக்காமல் உள்ளனர்.
தேவகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தது தென்னீர்வயல் கிராமம். இங்கு தென்னீ கண்மாய் என்ற கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு பருவமழை மட்டுமின்றி கல்லுப்பட்டி, எஸ்.ஆர். பட்டினம் பகுதிகளில் இருந்து குளக்கால் மூலமும் தண்ணீர் வரும்.
மழை காலங்களில் இந்த கண்மாய் பல நேரங்களில் நிரம்பி உள்ளது. ஆனால் தற்போது ஒரு குடம் தண்ணீர் கூட இல்லை. இந்த கண்மாய் தண்ணீர் மூலம் தென்னீர்வயல், காசாலை, பனந்தோப்பு, புதுக்கண்மாய், காந்திநகர் உட்பட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்.
இக்கிராமங்களை சேர்ந்த 450 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பல ஆண்டுகளாக துார்வார படாதது மட்டுமின்றி பெரிய பெரிய கருவேல் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.
பல கிராமங்களில் விவசாய பணிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த பகுதியில் இன்னும் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர். மழை பெய்யாமல் இருப்பதாலும், மழை பெய்தாலும் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கண்மாய் நிலைமை இருப்பதாலும் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.
கண்மாயை ஒரு அடி கூட துார்வாராமல் மடைவாய் மட்டும் கட்டி உள்ளனர். தண்ணீர் நிற்கவே வழி இல்லை. மடைவாய் கட்டி என்ன பிரயோஜனம் என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த கண்மாயை ஒட்டி பல கோடியில் பிரதமரின் கிராமச் சாலை திட்டத்தில் சிறு கால்வாய் பாலம் கட்டி ரோடு போட்டு உள்ளனர்.
ஆனால் கிராமத்தில் விவசாயிகளின் அடிப்படை பிரச்னையான கண்மாயை அதிகாரிகள் துார்வாராமல் மெத்தனமாக இருக்கின்றனர்.
பருவமழை இன்னும் சில ஓரிரு மாதத்தில் துவங்க உள்ள நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கண்மாயை பார்வையிட்டு தற்போது துார்வாராவிட்டாலும் பரவாயில்லை மரங்களை வருவாய்த்துறையினர் ஏலம் விட்டு வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
தென்னீர்வயல் பெரியண்ணன் கூறுகையில், இந்த தென்னீ கண்மாய் துார் வாரி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்மாயில் மரங்கள் எல்லாம் கருகி விட்டன. தற்போது ஒரு சில நாள் மழை பெய்தும் தண்ணீர் சொட்டு கூட வரவில்லை. ஆடுமாடு குடிக்க கூட தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் விவசாயத்தை தொடங்கினால் விவசாயம் பாதிக்கும் என்பதால் பணிகளை துவங்க வில்லை.