/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் 8 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை
/
திருப்புத்துாரில் 8 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை
திருப்புத்துாரில் 8 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை
திருப்புத்துாரில் 8 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை
ADDED : மார் 05, 2024 05:26 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் கடந்த 8 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்புத்துாாரில் காவிரிக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற வேண்டும்.
ஆனால் தற்போது அது அரிதாகி விட்டது. தற்போது கடந்த 8 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தேர்வு நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது மக்களை கவலைப்பட வைத்துள்ளது.
திருச்சி முத்தரசநல்லுார் பகுதியில் குழாய் பராமரிப்பு மற்றும் தரைமட்டத் தொட்டிக்கு குடிநீர் சப்ளை குறைந்து வருவதாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் குடிநீர் விநியோகம் சீராகும்' என்று பேரூராட்சியினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக இருநாட்களில் மேல்நிலைத்தொட்டிகளுக்கு குடிநீரேற்ற முடியும்.
தற்போது குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. இதனால் மேல்நிலைத் தொட்டி நிரம்ப 4,5 நாட்கள் ஆவதால் குடிநீரை வழக்கம் போல் விநியோகிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கோடை வெப்பம் அதிகரிக்க மேலும் குடிநீர் வரத்து குறையும். இதனால் வாரத்திற்கு ஒரு நாள் என்று குடிநீர் விநியோகம் மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், குடிநீர் சப்ளை சீராக உள்ளது. கேட் வால்வு பிரச்னையால் தண்ணீரை தொட்டியில் நிரப்புவதில் தாமதம் ஆகலாம்.
கோடை முழுவதும் குறிப்பாக ஜூன் வரை குடிநீர் சப்ளை செய்ய போதிய நீராதாரம் உள்ளது' என்று நம்பிக்கையளித்தனர்.
குடிநீர் சப்ளை பாதிக்காமலிருக்க விரைவாக குடிநீர் ஏற்ற பேரூராட்சியினர் மேல்நிலைத் தொட்டியில் முழு பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

