/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களில் துாரெடுக்காததால் தண்ணீர் இல்லை; l 8 ஆயிரம் ஏக்கர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
/
கண்மாய்களில் துாரெடுக்காததால் தண்ணீர் இல்லை; l 8 ஆயிரம் ஏக்கர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
கண்மாய்களில் துாரெடுக்காததால் தண்ணீர் இல்லை; l 8 ஆயிரம் ஏக்கர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
கண்மாய்களில் துாரெடுக்காததால் தண்ணீர் இல்லை; l 8 ஆயிரம் ஏக்கர் பாதிப்பால் விவசாயிகள் கவலை
ADDED : ஆக 07, 2025 11:44 PM

தேவகோட்டை தாலுகாவில் தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றியங்கள் உள்ளன. தாலுகா அளவில் இரண்டு ஒன்றியத்திலும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தில் 154 பெரிய கண்மாய்களும், ஒன்றிய நிர்வாகத்தில் 500 கண்மாய்களும் உள்ளன. இந்த 700 கண்மாய்கள் மூலம் 59 ஊராட்சிகளில் எட்டாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. வானம் பார்த்த பூமியாக மழைநீரை நம்பியே உள்ள இந்த தேவகோட்டை தாலுகாவில் குடி மராமத்து பணிகள் குறைவாகவே நடத்தப்பட்டன.
ஏலமிடப்படாத கண்மாய் அரசே மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கண்மாயில் முட்புதர்களை அகற்றி மராமத்து செய்தனர். அதுவும் தற்போது இல்லை. ஏற்கனவே கண்மாயில் உள்ள மரங்களை பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டதில் தனியார் மரங்களை அப்புறப்படுத்தினர். இதன் மூலம் அரசுக்கு, ஊராட்சிக்கு வருவாய் கிடைத்ததோடு கண்மாயும் சுத்தப்படுத்தப்பட்டது.
மழை நீர் சேர்ந்தது. கண்மாய்களில் மரங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன.
வேலை உறுதி யளிப்பு திட்டத்திலும் பெயரளவிற்கு லேசாக மண்ணை கிளறி விட்டு சென்றனர். சில ஆண்டுகளாக கண்மாய் பணியை நிறுத்திவிட்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை தான் நடக்கிறது.தற்போது மழை பெய்தும் கூட எந்த கண்மாயிலும் தண்ணீர் இல்லை. கண்மாய் துார்வாராமல் இருப்பதோடு வரத்துக் கால்வாய்கள் நிலைமையும் இது தான். ஆக்கிரமிப்பும், முட்புதர்களும் மண்டி உள்ளது.
காடாக மாறிய கண்மாய் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியண்ணன்: தென்னீர்வயல், காஞ்சி ரங்கால் கண்மாய்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்ட ஏலம் விட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மரங்கள் வெயிலில் பட்டு போய் கண்மாய்க்குள்ளேயே கிடக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக மழை பெய்தும் பலனில்லாமல் போய்விட்டது. கண்மாயும் முட்காடாக இருக்கிறது வயல்களுக்கு செல்லும் கண்மாய் பகுதியும் முட்காடு தான்.
தென்னீர்வயல், பனந்தோப்பு, மணப்பட்டி, மருத்தாணி, என பல கிராமங்களில் விவசாயம் பாதித்துள்ளது. பொதுப்பணித்துறை, ஒன்றிய அதிகாரிகள் கண்மாய்களை மழை காலத்திற்கு முன்பே பார்வையிட்டு பிரச்னையின்றி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றார்.