/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லை ரூ 4.2 லட்சம் திட்டம் வீண்
/
குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லை ரூ 4.2 லட்சம் திட்டம் வீண்
குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லை ரூ 4.2 லட்சம் திட்டம் வீண்
குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லை ரூ 4.2 லட்சம் திட்டம் வீண்
ADDED : நவ 28, 2024 05:25 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே வாணியம்பட்டியில் குளியல் தொட்டிக்கு தண்ணீர் இணைப்பை ஏற்படுத்த குடியிருப்பு வாசிகள் கோரியுள்ளனர்.
வாணியம்பட்டியில் 15 வது மான்ய நிதிக்குழு திட்டத்தின் கீழ் 2022 ல் ரூ 4.2 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் வசதியுடன் குளியல் தொட்டி கட்டப்பட்டது. கட்டப்பட்டு ஒரு மாதம் மட்டுமே ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தொட்டிக்கு தண்ணீர் வந்துள்ளது. அதுவும் மண் கலந்த நீர் வந்துள்ளது. பிறகு அதுவும் நின்று விட்டது. பல மாதங்களாக குளியல் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதற்கான மின் இணைப்பு போர்டும் சேதமடைந்து விட்டது.
இதற்கு முன் அருகில் இருந்த குளியல் தொட்டி சேதமானதற்காக கட்டப்பட்ட புதிய தொட்டியும் பலனின்றி உள்ளது. புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்கவும், அல்லது பழைய தொட்டிக்கு வழங்கியது போல பழைய குழாய் இணைப்பு மூலம் மேல்நிலைத்தொட்டி நீரை வழங்கவோ நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர். இது குறித்து கிராமத்தினர் பல முறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திட்டநிதி முழுமையாக செலவாகியும் திட்டத்தின் பலன் அப்பகுதி மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.