/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைவது குறித்து ஆய்வு வேண்டும்,
/
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைவது குறித்து ஆய்வு வேண்டும்,
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைவது குறித்து ஆய்வு வேண்டும்,
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைவது குறித்து ஆய்வு வேண்டும்,
ADDED : செப் 27, 2024 06:48 AM
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது.
சிவகங்கை மாவட்ட எல்லையான மணலுாரில் தொடங்கி பார்த்திபனுார் மதகு அணை வரை 36 கூட்டு குடிநீர் திட்டங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர வைகை ஆற்றை ஒட்டி உள்ள கிராமங்களின் குடிநீர் தேவைக்கும், படமாத்துாரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கும் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், கட்டனுார் கூட்டு குடிநீர் திட்டம், மதுரை கிழக்கு கூட்டு குடிநீர் திட்டம், சாயல்குடி கூட்டு குடிநீர் திட்டம், சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக வைகை ஆற்றில் கிணறுகள் தோண்டியும் கரைகளை ஒட்டிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. 20 அடி ஆழத்தில் கிடைத்து வந்த தண்ணீர் தற்போது 100, 200 அடி என கீழே போய்விட்டது.
இதனால் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். வைகை ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணறுகளில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில் : வைகை ஆற்றில் இருந்து ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மணல் திருட்டை தடுக்க எந்த வித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் திட்ட கிணறுகள் செயல்பட நேரம் எதுவும் இல்லை. 24 மணி நேரமும் தண்ணீர் உறிஞ்சிய வண்ணம் உள்ளது.
வைகை ஆற்றில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படவே இல்லை.
மே, ஜூன், ஜூலை மாதங்கள் போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் பெய்யாததால் வறட்சி நிலவுகிறது.
கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், இனி வைகை ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தும் முன் அப்பகுதி விவசாயிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.