/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அய்யனார் கோயிலில் திருவிளக்கு பூஜை
/
அய்யனார் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 26, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராம பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
சேவுகப்பெருமாள் ஐயனார் மற்றும் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.