/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுதானியம் பயிரிட்டவர்கள் கவலை உரிய விலை கிடைக்காமல் நஷ்டம்
/
சிறுதானியம் பயிரிட்டவர்கள் கவலை உரிய விலை கிடைக்காமல் நஷ்டம்
சிறுதானியம் பயிரிட்டவர்கள் கவலை உரிய விலை கிடைக்காமல் நஷ்டம்
சிறுதானியம் பயிரிட்டவர்கள் கவலை உரிய விலை கிடைக்காமல் நஷ்டம்
ADDED : மார் 27, 2025 07:05 AM

எஸ்.புதுார்: எஸ்.புதூரில் சிறுதானியம் பயிரிட்டவர்கள் உரிய விலை கிடைக்காததால் கவலையில் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் 1000 க்கும் மேற்பட்ட பரப்பில் உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு மானாவாரி உள்ளிட்ட நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட சிறுதானியங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
குறிப்பாக தட்டைப் பயறு 85 ரூபாய் வரை விலைபோன நிலையில், 55 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர். உளுந்து, பாசிப்பயறு இவற்றின் விலையும் குறைவாக உள்ளது.
கேழ்வரகு 30 ரூபாய்க்கு சென்று விட்டதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். சிறுதானிய விளைச்சலை பெருக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை தீட்டி வரும் நிலையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர்.
தேங்காய், கடலை போன்ற பயிர்கள் வேளாண் விற்பனை மையங்களில் நேரடி ஏலம் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் சிறு தானியங்களையும் நேரடியாக சந்தைப்படுத்தி கொள்முதல் ஏலம் விடவும், ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொன்.பழனியப்பன், விவசாயி, திருவாழ்ந்துார் கூறியதாவது; இவ்வொன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் சிறுதானியங்களை பயிரிட்டுள்ளனர். இந்தாண்டு கடுமையாக விலை குறைந்துள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் மார்க்கெட்டில் மொத்த சில்லரை கடைகளில் அதிக விலைக்கு போகிறது. அரசுகள் சிறுதானியங்களை ஏல கொள்முதல் மூலம் பெற்று ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்தால் விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்ட முடியும்.