/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே விவசாய நிலத்தில் குழாய் பதிக்க; விவசாயம் செய்ய முடியாததால் விவசாயிகள் புகார்

ADDED : செப் 01, 2024 06:05 AM

கரூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மானாமதுரை வழியாக மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை ஒட்டி பதிக்கப்படுகிறது.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் குரூப்பிற்குட்பட்ட தீயனுார் கிராமத்திற்கு செல்லும் விலக்கு ரோடு அருகே விவசாய நிலம் வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
விவசாயி தெய்வேந்திரன் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை ஒட்டி தீயனுார் கிராம விலக்கு ரோடு பகுதி அருகே விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தை சேதப்படுத்தி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை பதித்து வருகின்றனர்.
இன்னும் ஒரு சில வாரங்களில் துவங்க உள்ள விவசாய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதிகாரிகள் முறையாக அளவீடு செய்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை பதிக்காத காரணத்தினால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பணி செய்பவர்கள்யார் என்றே தெரியாத நிலை உள்ளது. எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில் ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணியை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை அப்புறப்படுத்தி, சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.