ADDED : ஜன 14, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடியில் சுற்றுலா பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார். தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உட்பட பிரான்சு நாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
கீழடி சிவன் கோயில் முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து, கரகாட்டம் ஆடினர். கிராம பெண்கள் கும்மியடித்து பாடல் பாடினர். கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் பங்கேற்றனர்.