/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தில் சிக்கிய வியாபாரி ரோட்டில் சிதறிய மீன்கள்
/
விபத்தில் சிக்கிய வியாபாரி ரோட்டில் சிதறிய மீன்கள்
விபத்தில் சிக்கிய வியாபாரி ரோட்டில் சிதறிய மீன்கள்
விபத்தில் சிக்கிய வியாபாரி ரோட்டில் சிதறிய மீன்கள்
ADDED : நவ 16, 2025 04:24 AM

திருப்புவனம்: மதுரை- - பரமக்குடி 4 வழிச்சாலையில் நேற்று காலை மீன் வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரோட்டில் மீன்கள் சிதறின.
வேம்பத்துார் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து 45, நேற்று காலை மதுரை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி திருப்புவனம் பகுதியில் விற்பனை செய்வதற்காக டூவீலரில் மதுரை -- பரமக்குடி 4 வழிச்சாலை வழியாக வந்தார்.
கழுகேர்கடை விலக்கு என்ற இடத்தில் பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. (ஹெல்மெட் வைத்திருந்தும் அதனை தலையில் அணியவில்லை) தலையில் பலத்த காயம் அடைந்த முத்துவை 108 ஆம்புலன்சில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முத்து விற்பனைக்காக கொண்டு வந்த மீன்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்