/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுட்டெரிக்கும் வெயிலால் வியாபாரிகள் தவிப்பு
/
சுட்டெரிக்கும் வெயிலால் வியாபாரிகள் தவிப்பு
ADDED : ஜூலை 12, 2025 04:47 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சிறு வியாபாரிகள் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
மதுரை மொத்த மார்க்கெட்டில் இருந்து கீரை, பழம், காய்கறிகள், கிழங்கு வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து தெருக்களில் சிறு வியாபாரிகள் பலரும் விற்பனை செய்வது வழக்கம், தினசரி வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகின்றனர். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், இந்தாண்டு பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஜூலை 17ம் தேதி காற்று வீசும் காலமான ஆடி பிறக்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் சுமைகளுடன் தெருக்களுக்கு சென்று காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முடியாமல் சிறு வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர்.