/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெருக்கடி
/
அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெருக்கடி
ADDED : செப் 30, 2025 04:07 AM

தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனை அருகில் கல்லுாரிக்கு செல்ல ரோடு வளைகிறது. இந்த வளைவுப் பகுதியில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பால் சாலை குறுகி போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் தினசரி மார்க்கெட் கட்டுமானப்பணியும் நடைபெறுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகே இருந்த சோலார் மின்விளக்கு துாண் சரிந்து விட்டது. அதை அகற்றி சீரமைக்கும் பணியும் நடைபெற வில்லை. தற்போது சரிந்த மின்விளக்கு கம்பத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை விரிவுபடுத்தவும், தேவையான இடத்தில் கூடுதல் விளக்கு வசதி ஏற்படுத்தவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.