/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் போக்குவரத்து நெருக்கடி; திருப்புத்துார் பஸ் வழித்தடம் மாற்றம்
/
சிவகங்கையில் போக்குவரத்து நெருக்கடி; திருப்புத்துார் பஸ் வழித்தடம் மாற்றம்
சிவகங்கையில் போக்குவரத்து நெருக்கடி; திருப்புத்துார் பஸ் வழித்தடம் மாற்றம்
சிவகங்கையில் போக்குவரத்து நெருக்கடி; திருப்புத்துார் பஸ் வழித்தடம் மாற்றம்
ADDED : ஆக 16, 2025 11:49 PM
சிவகங்கை; சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்புத்துாரில் இருந்து சிவகங்கை வரும் பஸ்களின் வழித்தடத்தை டிராபிக் போலீசார் மாற்றியுள்ளனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் மதுரை, மேலுார், திருப்புத்துார், காளையார் கோவில், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, மானாமதுரை, மேலுார், திருப்புத்துார் செல்லும் பஸ்கள் அனைத்தும் மதுரை முக்கு வழியாக செல்கிறது.
அதேபோல் அங்கிருந்து சிவகங்கை பஸ் ஸ்டாண்டிற்கு திரும்ப வரும் பஸ்களும் மதுரை முக்கு, மரக்கடை, தெப்பக் குளம் ரோடு, அரண்மனை வாசல் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வருகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் மதுரை முக்கு ஜங்ஷன், கோட்டை முனியாண்டி கோயில் பகுதியில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நேற்று முதல் திருப்புத்துாரில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் ராமச்சந்திர பூங்கா வழியாக திருப்பி விடப்பட்டு வாரச்சந்தை ரோடு, அரண்மனை வாசல் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வருகிறது.
டிராபிக் இன்ஸ்பெக்டர் சக்திஇசக்கி கூறுகையில், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. நேற்று முதல் நகருக்குள் திருப்புத்துாரிலிருந்து வரும் பஸ்களின் வழி தடத்தை மட்டும் மாற்றியுள்ளோம்.
வாரத்தில் புதன் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திருப்புத்துாரில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பழைய கோர்ட் ஜங்சனில் ராமச்சந்திர பூங்காவில் திரும்பி வாரச்சந்தை ரோட்டில் அரண்மனை வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும்.
புதன்கிழமை மட்டும் சந்தை என்பதால் எப் போதும் போல மதுரை முக்கு சென்று செல்லும். என்றார்.