/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து தொழிலாளர் மண்டல பேரவை கூட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர் மண்டல பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 04, 2025 03:00 AM
சிவகங்கை: அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப கோரி சிவகங்கையில் நடந்த அரசு போக்குவரத்து கழக மண்டல பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க காரைக்குடி மண்டல 34 ம் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மத்திய சங்க தலைவர் ராஜன் தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் சமயத்துரை வரவேற்றார்.
சம்மேளன துணை பொது செயலாளர் கனகராஜ் துவக்க உரை ஆற்றினார். மத்திய சங்க பொது செயலாளர் தெய்வீரபாண்டியன் வேலை அறிக்கை வாசித்தார்.
துணை பொது செயலாளர் லோகநாதன் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். மத்திய சங்க பொருளாளர் தியாகராஜன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
தீர்மானம்: போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடு, காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி, ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
சங்க துணை செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.