நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி,: இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாக பகுதியில் டி.எஸ்.ஏ., நலச்சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
வன அலுவலர் பிரபின் பாரதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மதிவாணன், கனிஷ்கா பிரபு, ஜெய்கணேஷ், ஜெயப்பிரகாஷ், ரகுபதி, முத்துக்குமார், பொம்மிராஜ், முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் பங்கேற்று, 150 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.