/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலை சாலையில் மரக்கன்று நடும் பணி
/
பிரான்மலை சாலையில் மரக்கன்று நடும் பணி
ADDED : செப் 16, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் இருந்து முட்டாக்கட்டி செல்லும் ரோட்டில் வனத்துறை, பறம்பு பசுமை காப்பகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. வனவர் கண்ணன் தலைமை வகித்தார். 40 மரக்கன்றுகள் நடப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வி.ஏ.ஓ.,க்கள் ஜெய்சன், முகமது அபுபக்கர், ஒடுவன்பட்டி ஊராட்சி செயலர் மயில்வாகணன், ஆசிரியர் முத்துக்குமார் பங்கேற்றனர்.
நடப்பட்ட அனைத்து மரக்கன்றுகளையும் கண்காணித்து மரமாக வரும் வரை தொடர்ந்து பராமரிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.