/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி -- -ராமேஸ்வரம் இரட்டை வழி ரயில் பாதை
/
திருச்சி -- -ராமேஸ்வரம் இரட்டை வழி ரயில் பாதை
ADDED : நவ 02, 2025 04:21 AM
காரைக்குடி: காரைக்குடியில் ரயில் பயணிகள் சங்க கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ராமநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் ராம்குமார், ஆலோசகர் சாமி திராவிட மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரியக்குடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
செட்டிநாடு, தேவகோட்டை ரஸ்தா ரயில் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும், ரயில்வே சுரங்கப்பாதையில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடியில் ஷேர் ஆட்டோக்களை இயக்கிட வேண்டும், திருச்சி காரைக்குடி ராமேஸ்வரம் பாதையை இரட்டை ரயில் வழி பாதையாக மாற்றி அமைக்க வேண்டும், காரைக்குடி மதுரை புதிய ரயில் பாதை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

