ADDED : நவ 02, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனி முத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் கரிகாலன், ஊராட்சி செயலர் மூர்த்தி கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கிராம பொதுமக்கள், விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்த மக்கள் சிவகங்கைக்கும் முத்துப்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் மதுரை-தொண்டி ரோட்டில் கல்லறை தோட்டம் பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கியதை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முத்துப்பட்டி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

