/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி, -காரைக்குடி, விருதுநகர் ரயிலால் பயணிகள் மகிழ்ச்சி: கூடுதல் பெட்டி இணைப்பால் 1296 சீட் கிடைக்கும்
/
திருச்சி, -காரைக்குடி, விருதுநகர் ரயிலால் பயணிகள் மகிழ்ச்சி: கூடுதல் பெட்டி இணைப்பால் 1296 சீட் கிடைக்கும்
திருச்சி, -காரைக்குடி, விருதுநகர் ரயிலால் பயணிகள் மகிழ்ச்சி: கூடுதல் பெட்டி இணைப்பால் 1296 சீட் கிடைக்கும்
திருச்சி, -காரைக்குடி, விருதுநகர் ரயிலால் பயணிகள் மகிழ்ச்சி: கூடுதல் பெட்டி இணைப்பால் 1296 சீட் கிடைக்கும்
ADDED : அக் 18, 2024 05:21 AM
விருதுநகர் - திருச்சி இடையே உள்ள மாவட்ட பயணிகளின் வசதிக்காகவும், அரசு, தனியார் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் வசதிக்காக டெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. தினமும் காலை 6:20 மணிக்கு விருதுநகரில் புறப்படும் இந்த ரயில் காரைக்குடிக்கு காலை 9:30 மணிக்கு சென்று சேரும். அங்கிருந்து காலை 9:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 11:30 மணிக்கு திருச்சி சென்று சேரும். டெமு பாசஞ்சர் ரயிலில் 6 பெட்டிகள் மட்டுமே இணைத்து ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் பயணிகளின் வருகை இந்த ரயிலுக்கு அதிகரித்து விட்டதால், நேற்று முதல் (அக்., 17) கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து, மொத்தமாக 12 ரயில் பெட்டிகளை இணைத்து விருதுநகர் - காரைக்குடி - திருச்சி இடையிலான ரயில் ஓடுகின்றன. முற்றிலும் புதிய ரயில் பெட்டிகளை இணைத்து ஓடுவதால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயிலில் 1296 பேர் பயணிக்கலாம்
டெமு பாசஞ்சர் ரயில் ஓடும் போது 6 பெட்டிகள் மட்டுமே இருந்தன. இதில், ஒரு பெட்டிக்கு 73 பேர் வீதம் 438 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், முற்றிலும் இந்த ரயிலில் இருந்த டெமு' பெட்டிகள் அனைத்தையும் நீக்கி விட்டு, நேற்று முதல் ஐ.சி.எப்., கோச் ரயில் பெட்டிகள் 12 வரை இணைத்து ஓட துவங்கியுள்ளன. இதனால், ஒரு ரயில் பெட்டியில் 108 பயணிகள் வீதம், ஒரே ரயிலில் 1,296 பயணிகள் வரை அமர்ந்து செல்ல முடியும்.
விருதுநகர் முதல் திருச்சி வரை நீண்ட துாரம் இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு இருக்கை பிரச்னை இன்றி 5:10 மணி நேரம் தாராளமாக இருக்கையில் அமர்ந்தே பயணிக்கலாம். ரயில்வே நிர்வாகம் தற்காலிகமாக 12 பெட்டிகளுடன் ரயில் ஓடும் என தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மானாமதுரை - -மன்னார்குடி அவசியம்
ஏற்கனவே மானாமதுரையில் இருந்து மன்னார்குடி வரை சென்ற ரயிலை, நிறுத்திவிட்டு காரைக்குடியில் இருந்து மன்னார்குடி வரை மட்டுமே இயக்குகின்றனர். இதனால், திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், அவதிக்குள்ளாகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் மானாமதுரை - மன்னார்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.