/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோந்து இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் அவதி
/
ரோந்து இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் அவதி
ADDED : ஜூலை 24, 2025 11:58 PM
மானாமதுரை; மானாமதுரை பஸ் ஸ்டாண்ட் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். சில மாதங்களாக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபடும் பெண்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அவர்களுடன் வரும் சிலர் பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து மது குடித்து விட்டு பயணிகளிடம் பிரச்னை செய்கின்றனர்.
மானாமதுரை போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடிக்கடி சோதனை நடத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.