/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆம்னி பஸ் டூவீலரில் மோதி இருவர் பலி
/
ஆம்னி பஸ் டூவீலரில் மோதி இருவர் பலி
ADDED : ஜூன் 19, 2025 10:48 PM
சிவகங்கை:சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் ஆம்னி பஸ் டூவீலரில் மோதியதில் நண்பர்கள் இருவர் பலியாகினர்.
சிவகங்கை அருகே டி. உசிலங்குளம் மலைச்சாமி மகன் மருதுபாண்டி 21. இவரது நண்பர் கீழக்கண்டனி சக்திவேல் முருகன் மகன் வெற்றிவேல் குமரன் 18. ஜூன் 18 ல் மருதுபாண்டி பிறந்த நாளை கொண்டாட அன்றிரவு 10:30 மணிக்கு டூவீலரில் நண்பர் வெற்றிவேல்குமரன் வீட்டிற்கு சென்றார். பின் இருவரும் டூவீலரில் மீனாட்சி தெரு விலக்கில் சென்றபோது எதிரே ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கொக்காடியை சேர்ந்த வில்வலிங்கம் மகன் உத்தமநாதன் 29 ஓட்டி வந்த ஆம்னி பஸ் டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமுற்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெற்றிவேல் குமரன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருதுபாண்டி இறந்தனர். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார் ஆம்னி பஸ் டிரைவர் உத்தமநாதனை கைது செய்தனர்.