/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர்- சரக்கு வாகனம் மோதலில் இருவர் பலி
/
டூவீலர்- சரக்கு வாகனம் மோதலில் இருவர் பலி
ADDED : ஜூன் 21, 2025 02:30 AM

சிவகங்கை:காளையார்கோவில் அருகே வேளாரேந்தலில் சரக்கு வாகனம் மோதியதில் டூவீலரில் சென்ற இருவர் பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் மனைவி அயோத்தியம்மாள் 68. இவர்களது மகள் கலைச்செல்வி 39, மகன் வெங்கடேசன். காளையார்கோவில் அருகே வாளைபெருமாள் கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகள் சங்கீதாவிற்கும், வெங்கடேசனுக்கும் திருமணம் நடந்தது.
கர்ப்பிணியான சங்கீதா தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பார்க்க அயோத்தியம்மாள், மகள் கலைச்செல்வியுடன் நேற்று மதியம் தேவகோட்டையில் இருந்து வேளாரேந்தலுக்கு வந்திருந்தார். அங்கு பஸ் ஸ்டாப்பில் இருந்து வாளைபெருமாள் கிராமத்திற்கு அவர்களை அழைத்து செல்ல, சங்கீதாவின் தந்தை முத்துக்கிருஷ்ணன் டூவீலரில் வந்தார். மாலை 4:20 மணிக்கு டூவீலரில் மூவரும் அக்கிராமத்திற்கு சென்றபோது, வேளாரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே காளையார்கோவிலில் இருந்து இளையான்குடி சென்ற சரக்கு வாகனம் டூவீலரில் மோதியது. இதில் டூவீலரில் சென்ற முத்துக்கிருஷ்ணன், அயோத்தியம்மாள் பலியாயினர். கலைச்செல்வி, சரக்கு வாகன டிரைவர் காரைக்குளம் சங்கர் 45, காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் விசாரிக்கிறார்.