ADDED : செப் 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, செப். 29-
சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் அலமேலு வீட்டில் செப். 20ஆம் தேதி 21 பவுன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அழகர் மனைவி கலா 50, அவரது மகன் விஜயகுமார் 31 இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி, 88 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
