ADDED : டிச 12, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா .போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி அருண் பாண்டியன் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் முன் அருண்பாண்டியன் டூவீலரை நிறுத்தியிருந்தார்.
இரவு 2 பேர் டூவீலரை திருடி திருப்பாச்சேத்தி அருகே துாதை விலக்கு பகுதியில் சென்ற போது மானாமதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் டூவீலரை நிறுத்திய போது இருவரும் டூவீலரை போட்டு விட்டு தப்பி விட்டனர்.
மானாமதுரை போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் பதிவு மூலம் தப்பிய பிச்சைபிள்ளையேந்தலைச் சேர்ந்த ஆண்டிச் செல்வம்19, ராஜகம்பீரம் முகமது பாரிஸ் அசன் 18 இருவரையும் கைது செய்தனர்.