/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; பொதுமக்கள், வர்த்தகர்கள் அவதி
/
சிவகங்கையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; பொதுமக்கள், வர்த்தகர்கள் அவதி
சிவகங்கையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; பொதுமக்கள், வர்த்தகர்கள் அவதி
சிவகங்கையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; பொதுமக்கள், வர்த்தகர்கள் அவதி
ADDED : ஜூலை 22, 2025 11:39 PM
சிவகங்கை; சிவகங்கையில் நேற்று பகல் முழுவதும் அறிவிக்கப்படாத மின்தடையால் வீடுகளில் இல்லத்தரசிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளின் கீழ் 55 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரான இங்கு கலெக்டர் அலுவலகம், அனைத்து மாவட்ட தலைமை அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளன. கோடை வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளில் ஏ.சி.,யை பயன்படுத்த மின்சாரத்தை நம்பியே உள்ளனர்.
அதே போன்று மின்சாரமின்றி வீடுகளில் இல்லத்தரசிகள் கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் நேற்று பகல் முழுவதும் சிரமப்பட்டனர்.
அந்தளவிற்கு எந்தவித முன்அறிவிப்பின்றி சிவகங்கை நகரில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சிவகங்கை நகருக்கு மின் சப்ளை செய்யும் துணை மின்நிலையத்தில் மின்சாதனம் ஒன்று தீப்பற்றி எரிந்து விட்டது.
அந்த மின்சாதனத்தை மாற்றும் பணிக்காக நேற்று பகலில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. இரவு 7:00 மணிக்குள் சீராகும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.