/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதுகாப்பு இல்லாத குடிநீர் ஊருணி
/
பாதுகாப்பு இல்லாத குடிநீர் ஊருணி
ADDED : செப் 20, 2025 11:44 PM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இரணியூர் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிநீர் ஊருணியை முள்வேலியிட்டு நீரை சுகாதாரமாக பாதுகாக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
இரணியூர் அம்மன்சேங்கை ஊரணியை இப்பகுதியினர் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீர் குடிக்க சுவையாக இருப்பதுடன் சமைக்க நன்றாக உள்ளதால் இரணியூர் மட்டுமின்றி காந்திநகர், கீழக்காவனுார், அயினிப்பட்டி, காவேரிப்பட்டி, செண்பகம்பேட்டை, முத்துவடுகநாதபுரம், நாகலிங்கபட்டி, மார்க்கண்டேயன்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்தும் பெண்கள் வந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.
பழமையான சிறப்பு பெற்ற இந்த ஊருணிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு முள்வேலியிட்டு பாதுகாத்தனர். தற்போது பராமரிப்பின்றி முள்வேலி சிதைந்து கால்நடைகள்,நாய்கள் ஊருணியில் சென்று அசுத்தம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசு தரப்பில் ஊருணியை பராமரித்து முள்வேலி அமைத்து குடிநீரை சுகாதாரத்துடன் பாதுகாக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.