தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பாதுகாப்பு இல்லாத மின்மீட்டர் பெட்டி

பாதுகாப்பு இல்லாத மின்மீட்டர் பெட்டி

பாதுகாப்பு இல்லாத மின்மீட்டர் பெட்டி


UPDATED : அக் 28, 2026 11:38 PM

ADDED : அக் 28, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 11:38 PM ADDED : அக் 28, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குடிநீர் தொட்டிகளுக்கான மின் மீட்டர் பெட்டி திறந்த நிலையில் ஆபத்தான முறையில் உள்ளது.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கரிசல் குளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னிக்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் மின் இணைப்பு மற்றும் மீட்டர் பெட்டி மிகவும் தாழ்வான இடத்தில் திறந்த நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு தண்ணீர் பிடிக்க வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீட்டர் பெட்டியை தொட்டால் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் அபாயமும் இருப்பதாக அச்சப்படுகின்றனர்.

கடந்த மாதம் கூட ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இதேபோன்று மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பலியாகினர். ஆகவே மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ள மின் மீட்டர் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us