ADDED : அக் 29, 2025 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் செல்வி 50.
வயிற்று வலி காரணமாக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது கருப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை மூலம் 3 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். மயக்கவியல் டாக்டர். ராஜ்குமார், செவிலியர் காஞ்சனா மற்றும் பணியாளர்களை சிவகங்கை மாவட்ட இணை இயக்குனர் அருள்தாஸ் பாராட்டினார்.

