/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முகூர்த்த கால் நடுதல்
/
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முகூர்த்த கால் நடுதல்
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முகூர்த்த கால் நடுதல்
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா முகூர்த்த கால் நடுதல்
ADDED : மே 28, 2025 11:38 PM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா 11 நாட்கள் வரை நடைபெறும். நேற்று காலை 6:50 முதல் 7:25 மணிக்குள்முகூர்த்தக்கால் நடப்பட்டு, வைகாசி திருவிழா துவக்க பணி நடந்தது.
மே 31 அன்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜை நடைபெறும். ஜூன் 1ம் தேதி காலை 9:25 மணி முதல் 11:00 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம்நடைபெறும். அன்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி கொள்வார்கள்.
தினமும் காலை வெள்ளி கேடகத்திலும், இரவில் அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார்.
ஜூன் 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு தங்கரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் உட்பிரகாரத்தில் வலம் வருவார். ஜூன் 8 இரவு 7:00 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வருவார்.
விழாவின் 9ம் நாளான ஜூன் 9ம் தேதி காலை 9:25 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருள்வார். அதனை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வரும் தேரோட்டம் நடைபெறும்.
தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.