/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வல்லனி புனித அன்னை தெரசா சர்ச் திருவிழா தேர்பவனி
/
வல்லனி புனித அன்னை தெரசா சர்ச் திருவிழா தேர்பவனி
ADDED : மே 19, 2025 05:54 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே வல்லனி புனித அன்னை தெரசா சர்ச் திருவிழா தேர்பவனி நடைபெற்றது.
வல்லனி புனித அன்னை தெரசா சர்ச் திறக்கப்பட்டதும், முதல் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஆர்.அருள்ஜோசப் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
புனித அன்னை தெரசா சர்ச் பாதிரியார் வி.சூசைமாணிக்கம், கூட்டுத்திருப்பலியை பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமல்ராஜ் நடத்தினர்.
மே 18 வரை நடந்த இவ்விழாவில் தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றது.
விழாவின் 9ம் நாளான மே 17 அன்று மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை தெரசா எழுந்தருளினார். பின்னர் தேர்பவனி நடைபெற்றது.
தேர்பவனியை மறைமாவட்ட முன்னாள் பிஷப் சூசைமாணிக்கம் துவக்கி வைத்தார். வல்லனி முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்று, சர்ச்சை அடைந்தது.
நேற்று காலை 8:15 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை பெருவிழா அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
சருகணி பாதிரியார் லுார்துராஜ் உட்பட தேர்பவனியில் பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.