/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சியில் இணைந்த வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி
/
சிவகங்கை நகராட்சியில் இணைந்த வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி
சிவகங்கை நகராட்சியில் இணைந்த வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி
சிவகங்கை நகராட்சியில் இணைந்த வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி
ADDED : ஜன 02, 2025 04:58 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் ஊராட்சி, வாணியங்குடி ஊராட்சியில் பாதி பகுதியை இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியாக 1964ல் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்பு 1985ல் மாவட்ட தலைநகராக மாறியது. அன்று முதல் இன்று வரை நகராட்சி விரிவாக்கம் செய்யப்படவில்லை. 7 கி.மீ., சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 2011ல் மக்கள் தொகை 42 ஆயிரமாக இருந்தது.
சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி, கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகினிப்பட்டி, பையூர், இடையமேலுார் ஊராட்சியில் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 2014ல் அப்போதைய நகராட்சித்தலைவர் அர்ச்சுனன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.
நகராட்சியில் எல்லை விரிவாக்கம் செய்வதற்கேற்றாற் போல் நகர் பகுதிகள் விரிவடைந்து வளர்ச்சிப்பாதையில் உள்ளது.
தற்போது நகராட்சி மக்கள் தொகை 60 ஆயிரமாக உள்ளது. வருமானம் ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாயாக உள்ளது. சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், என 2023 ஏப்ரலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் ஊராட்சி முழுவதும், வாணியங்குடி ஊராட்சியில் 2வது வார்டு 7 வார்டு தவிர்த்து மற்ற வார்டுகள் சிவகங்கை நகராட்சியுடன் இணைகின்றன. இதன் மூலம் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவானது, 23.50 சதுர கிலோ மீட்டராக விரிவடைகிறது. மக்கள் தொகையும் 64 ஆயிரத்து 901 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.