ADDED : ஜூன் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவ ஒடுக்கம் உள்ளது.
இங்கு விநாயகர், முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னதி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு விநாயகருக்கு கருங்கல்லினால் சன்னதி கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தண்டாயுதபாணி சுவாமிக்கும் ரூ.55 லட்சம் செலவில் கருங்கல்லில் தனி சன்னதி கட்டுவதற்காக நேற்று 15 அடி ஆழத்தில் வாஸ்து பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகளும் நடைபெற்றது.