/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை எடை குறைவதாக விற்பனையாளர்கள் புகார்
/
ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை எடை குறைவதாக விற்பனையாளர்கள் புகார்
ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை எடை குறைவதாக விற்பனையாளர்கள் புகார்
ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை எடை குறைவதாக விற்பனையாளர்கள் புகார்
ADDED : டிச 18, 2024 06:41 AM
இளையான்குடி : இளையான்குடி ரேஷன் கடைகளுக்கு கோடவுனிலிருந்து லாரிகளில் வரும் பொருட்கள் எடை குறைவாக வருவதாக விற்பனையாளர்கள் புகார் கூறுகின்றனர்.
இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்கோ மூலம் 12க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
கோடவுனிலிருந்து மூடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் லாரிகளில் இளையான்குடி பகுதி ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலையில் ஒவ்வொரு மூடையிலும் பொருட்கள் மிகவும் எடை குறைவாக இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இளையான்குடி ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறியதாவது: கடைகளுக்கு லாரிகளில் வரும் ஒவ்வொரு மூடைகளை இறக்கி எடை போடும் போது ஒரு மூடையில் 5 கிலோவில் இருந்து 10 கிலோ வரை எடை குறைகிறது. லாரிகளில் பொருட்களை கொண்டு வருபவர்களிடம் கேட்டால் நாங்கள் கோடவுனிலிருந்து அப்படியே கொண்டு வந்து கொடுப்பதாக கூறுகின்றனர்.
அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எங்களது ஊதியத்திலிருந்து குறைந்த பொருள்களுக்கு பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இளையான்குடி பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை எடை குறையாமல் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: லாரிகளில் வரும்போது மூடைகளில் விரிசல் ஏற்பட்டு குறைந்த அளவிலான பொருட்களே கீழே சிதற வாய்ப்புள்ளது. அதிகளவில் எடை குறைவதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவித்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.