/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.2 லட்சம் வழங்கிய கிராம மக்கள்
/
ரூ.2 லட்சம் வழங்கிய கிராம மக்கள்
ADDED : மார் 21, 2025 06:41 AM
மானாமதுரை: மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 5 வருடங்களுக்கும் மேலாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மேல்நிலைக் கல்வி கற்பதற்காக இளையான்குடி, பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
கிராம மக்கள் மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென்று போராடி வருகின்றனர்.
மக்கள் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்தை மேலநெட்டூர் கிராம மக்கள் அரசு கணக்கில் செலுத்தி அதற்குரிய ரசீதை மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர்.
இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.